சென்னை பழையவண்ணாரப்பேட்டை பகுதியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வகையில் திருநங்கைகள் உரிமைகள் சங்கம் சார்பில் திருநங்கைகள் இணைந்து தெரு நாடகம்,நாட்டுப்புறப் பாடல் ,நடனம்,தெரு வரைபடங்கள் மேலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வண்ணாரப்பேட்டை சரக காவல் துணை ஆணையாளர் சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மக்களிடத்தில் கொரோனா பற்றிய அறிவுரைகளை வழங்கினார். இதனை அடுத்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு சுவாச கவசம் கபசுரக் குடிநீர் ஆகியவைகளை வழங்கினார்.