மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு வயது 39 தனது மனைவி நான்கு குழந்தைகளுடன் சென்னை ராயபுரம் ரயில்வே நிலையம் அருகே தாற்காலிக குடுசைப் பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஒருவர் தன் மனைவியிடம் உங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கித் தருவதாகக் கூறி மூன்று வயது உடைய மர்ஜினா என்ற பெண் குழந்தையை கடத்திச் சென்றதாகவும் எனது குழந்தையை உடனடியாக கண்டுபிடித்து கொடுக்குமாறும் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.