திருவள்ளூர், அத்திப்பட்டு, அனல் மின் நிலையத்தில், ஒப்பந்த அடிப்படையில், 300 வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு, தினக்கூலி, 200 ரூபாய். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில், இவர்கள் வேலையில்லாமல், அங்கேயே தங்கியிருந்தனர். ஆனால், இவர்களை வேலை வாங்கிய , ஒப்பந்த கம்பெனி நிர்வாகிகள் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டன, இதனால், அவர்கள் உணவு இல்லாமல், பட்டினி கிடந்தனர். உதவிக்கு யாரும் இல்லாத காரணததால், சொந்த ஊருக்கு செல்வதற்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக அத்திப்பழத்தில் இருந்து தண்டவாள வழியாக நடந்து வந்தனர், தகவல் கிடைத்து, எண்ணூர் காவல் உதவி ஆணையர் உக்கிரப்பாண்டி மற்றும் சக காவலர்கள் விரைந்து வந்து, அவர்களை சமாதனப்படுத்தினர், ஆனால், அவர்கள் அங்கே சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர், அவர்களிடம், சொந்த ஊருக்கு செல்வதற்கு, ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த பிறகு, போராட்டத்தை கைவிட்டனர், இதையடுத்து, மீஞ்சுருக்கு அழைத்து சென்று, அங்கு உணவு கொடுக்கப்பட்டு, தங்கவைக்கப்பட்டனர், விரைவில், அவர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், சம்பளம் கொடுக்காமல் தொழிலாளர்களை ஏமாற்றிய , ஒப்பந்த கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.