தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி சங்கரலிங்கனார் 64 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சமத்துவ மக்கள் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பெருந்தலைவர் காமராஜர் படித்த பள்ளியில் படித்த சங்கரலிங்கனார் , நாடார் சமூகத்திற்காக அபிவிருத்தி சங்கத்தின் துவங்கியர் கதர் விற்பனையில் ஆர்வம் சங்கரலிங்கனார் காந்தியுடன் தண்டி யாத்திரையிலும் பங்கு கொண்டுவர் மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு போராட்டம் நடத்தியதன் தூண்களிலும் உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டார் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்றும் ,இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று 12 கோரிக்கைகளுடன் உண்ணாவிரதத்தைத் துவங்கி 76 நாட்கள் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தவர்

அலங்கரிக்கப்பட்ட சங்கரலிங்கனார் திருவுருவ படத்திற்கு சமத்துவ மக்கள் கழகம் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் சங்கரலிங்கனார் பெருமைகள் குறித்து அவர் செய்த தியாகங்கள் குறித்து தமிழ்நாடு பெயர் பெற்று தந்தவர் என்பது குறித்து எடுத்துரைத்தார்.