சென்னை புதுவண்ணாரப்பேட்டை வா.உ.சி நகர் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (வயது26) இவர் மணலி பகுதியில் ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த வாரம் மணலியில் வேலை இல்லாத காரணத்தினால் வாஉசி நகர் பகுதியில் ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார் இன்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்துக்கு தெரியவந்தது உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பரோட்டா மாஸ்டர் லோகநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அப்பகுதியில் புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.