சென்னை காசிமேட்டில் 110 நாட்கள் கழித்து காசிமேடு மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வதற்கு சமூக இடை வெளியுடன் நோய்த்தொற்று பரவாமல் விற்பனை செய்வதற்கு இடங்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்

கடந்த மூன்று நாட்களாக காசிமேடு பகுதியில் மீன் விற்பனை துவக்க நிலையில் அவ்வப்போது கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் காவல்துறையினருக்கும் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனை சீர்செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தலைமையில் சென்னை காவல் கூடுதல் ஆணையர் அருண், மீன்வளத் துறை இயக்குனர் சமீரன், வடக்கு காவல் இணை ஆணையர் பால
கிருஷ்ணன், துணை ஆணையர் சுப்புலட்சுமி, மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், உள்ளிட்டோர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் மீனவ சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரே இடத்தில் மீன் விற்பனை செய்ய வேண்டாம் என்றும் தனித்தனியாக 7 இடங்களில் மீன் விற்பனை செய்யுமாறு மீனவர்களுக்கு ஆணையர் பிரகாஷ், அறிவுறுத்தினார் பின்பு காசிமேடு பகுதியில் பொதுமக்களுக்கு சில்லறையில் மீன் விற்பதற்கு தடை விதித்து உள்ளதாக தெரிவித்தார்.