சென்னை ஆர் கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வினோபா நகர் பகுதியில் வீன் தகராறில் கத்தியால் வெட்டப்பட்டு ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

 

இச்சம்பவம் குறித்து ஆர்கே நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தண்டையார்பேட்டை இந்திரா காந்தி நகரைச் சார்ந்த வேலு என்பவர் வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறார் இவர் தண்டையார்பேட்டை ஐஓசி பகுதியில் உள்ள வினோபா நகரில் உள்ள தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் இந்நிலையில் ஆட்டோ ஓட்டுனர் வெளுக்கும் தினேஷிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது இந்நிலையில் தினேஷின் கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து வேலுவை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர் ரத்த வெள்ளத்தில் இருந்த வேலுவை அப்பகுதி பொதுமக்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் இதுகுறித்து ஆர்கேநகர் காவல்துறையினர் தினேஷ் என்ற குட்ட தினேஷ், கணேஷ், மணிகண்டன், அசோக், குமார், பிரவீன், மற்றும் அப்பு என்ற தொங்கு, ஆகிய 7 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.