சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட பட்டேல் நகர் முத்துமாரியம்மன் கோவிலில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலம் பெற தேமுதிக வடசென்னை செயலாளர் பா.மதிவாணன் ஆலோசனைப்படி 38 ஆவது வட்டத்தில் தலைவர் ஜே.பக்ருதீன் பொருளாளர் ஜே.ஏழுமலை பகுதி பிரதிநிதி எஸ்.கே.பாலா ஏற்பாட்டில் நேற்று சிறப்பு பூஜை நடத்தி அப்பகுதி மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் டி.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

அப்போது கூறிய தேமுதிக பகுதி பிரதிநிதி எஸ்.கே.பாலா கூறுகையில். எங்கள் தலைவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்ட பெண் முதல்வரை சட்டசபையில் தைரியமாக எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் அவர் மீண்டும் உடல் நலம் பெற்று அவரின் கம்பீரக் குரல்களால் வரும் தேர்தலில் பிரச்சாரங்கள் செய்து வெற்றி பெற்று மக்கள் சேவையில் இறங்க வேண்டும் என்று ஆசையுடன் கோவில்களில் பூஜை செய்து வருகிறோம் என்று கூறினார்.