சென்னை எண்ணூரில் குடும்பத் தகராறில் மகனே தந்தையை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் லாரி ஓட்டுனர் நாகராஜ் இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சொத்துக்காக தனது தாத்தாவை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார் இந்நிலையில் லாரி ஓட்டுநராக இருந்த நாகராஜ் கடந்த மூன்று மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று மது போதையில் இருந்த நாகராஜ் தன் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார் இதனை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் இளைய மகன் தமிழ்ச்செல்வனை நாகராஜ் அரிவாளால் கையில் காயம் ஏற்படுத்தினார். இதைக்கண்ட மூத்த மகன் சேதுபதி ஆத்திரமடைந்து கத்தியை பிடுங்கி நாகராஜை சராமரியாக வெட்டி உள்ளார் இதில் நிலைகுலைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இதனையடுத்து சேதுபதி அருகிலிருந்த வழக்கறிஞர் துணையுடன் எண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை ஈடுபட்டு வருகின்றனர் பல லட்சம் மதிப்புள்ள சொத்தை பாகம் கேட்டு கடந்த 2016ஆம் ஆண்டு 80 வயது தாத்தாவை கொலை செய்த நாகராஜை தற்பொழுது அவரது மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது