திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான தோல் பதனிடும் தொழிற்சாலையில் கட்டிடம் இடித்து தரைமட்டம் செய்யும் பணியை வேலூரை சேர்ந்த குத்தகைதாரர் மேற்கொண்டார்.

அப்போது கடக்கால் பகுதியில் இருந்த மணலை 3 அடிக்கு மேல் எடுத்ததை தவறாக கருதிய வருவாய்த் துறையினர், மேற்கண்ட பணியில் ஈடுபடுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றவை பறிமுதல் செய்ய உமராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்னர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இது டி.ஆர். என்கிற தனியார் தொழிற்சாலை வளாகத்துக்குள் நடந்ததாகும்.

சொந்த இடத்தில் அதிலும், ஏற்கனவே கட்டுமானப்பணிக்காக பயன்படுத்திய மணலை கணக்கெடுக்க பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல் துறை என அந்த வளாகத்துக்குள் நுழைந்து கடமையாற்றினார்கள்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வாணியம்பாடி கச்சேரி சாலை டி.கே.டேனரி பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அதன் உரிமையாளர் மணலை, மணல் கொள்ளையர்களுக்கு விற்று உள்ளார். அங்கே சுமார் 20 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி இரவு நேரத்தில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

இடத்தின் உரிமையாளர் மற்றும் மணல் கொள்ளையர்களின் பெயர் மற்றும் செல் போன் நம்பர் அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்று அப்பகுதி சமூக சேவகர்கள்ளிடம்மிறுந்து கேள்வியாக எழுகிறது.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்