தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் கூலித் தொழிலாளிகள் வேலையில்லாமல். கையில் பணம் இல்லாமல் பல இடங்களில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மனிதர்கள் மட்டுமல்ல வாய் பேச முடியாத ஜீவராசிகள் உள்பட பசியின் கொடுமையால் வாடி வதங்கி வருகின்றனர். இந்த நிகழ்வை உணர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த 5 நாட்களாக உணவு வழங்கி வருகிறார். திருவெற்றியூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, போன்ற தன்னால் முடிந்த இடத்துக்கெல்லாம் தனது இருசக்கர வாகனத்தில் சுவாசக் கவசம் அணிவித்து வலம் வருகிறார்.அவர் கூறுகையில் சாமானிய மக்கள் தினமும் கூலி வேலை செய்து வீட்டில் சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம் அதில் மீதி உள்ளதை காக்கா, குருவி, நாய், பூனை, போன்ற பேச முடியாத ஜீவராசிகளுக்கு வைத்து வருவார்கள் இன்றைய காலகட்டத்தில் யாருக்கும் வேலை இல்லை கையில் பணம் இல்லை இதனால் மனிதர்களுக்கே உணவு இல்லையே பேச முடியாத ஜீவராசிகள் என்ன செய்யும் அதனால் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்று கூறுகிறார். இதுமட்டுமல்லாமல் சுவாசக் கவசம், கையுறை, கை சுத்தம் செய்யும் சானிட்டரி, தண்ணீர் பாட்டில்,போன்ற பொருட்களை கடந்த நாலு நாட்களாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கிவருகிறார். இரவு நேரத்தில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை தட்டி எழுப்பி உணவு கொடுப்பது இவருக்கு வழக்கமாகி வருகிறது. நன்றாக தூங்கு பவர்களை தட்டி எழுப்பினால் தவறு என்று சொன்னால். அவர்கள் தூங்கவில்லை பசி மயக்கத்தில் உறங்கி உள்ளார் என்று மனவருத்தத்துடன் கூறுகிறார். இவன், கிங் மேக்கர் காமராஜர் நற்பணி மன்றம் சட்ட ஆலோசகர் ரெயின்போ விஜயகுமார்.