சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் ஊரடங்கு உத்தரவால் வீட்டில் எளிய முறையில் நடந்த சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகர் 4 வது தெருவைச் சேர்ந்த மணமகள் தீபிகா
திருவான்மியூர் சேர்ந்த நிர்மல்குமார். இவர்களுக்கு இன்றைய தினத்தில் திருமணம் மண்டபத்தில் நடைபெற இருந்த நிலையில் முழு ஊரடங்கு உத்தரவினால் மணமகள் வீட்டில் சமூக சீர்திருத்த திருமணம் எளிய முறையில் நடைப்பெற்றது.

இந்த திருமணத்தில் முக்கிய குடும்ப உருப்பினர்கள் சுவாச கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி திருமணத்தில் கலந்து கொண்டனர்.