புதிய உயிரை உண்டாக்கி, புதிய வாழ்க்கையை உருவாக்குவதில் விந்தணு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண் கருவை சென்றடைவதற்கு, விந்தணு குறிப்பிட்ட எண்ணிக்கையை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான், புதிய உயிர் உண்டாகும். விந்துவில் உயிர் அணுக்களின் எண்ணிக்கை விந்தணு என குறிப்பிடப்படுகிறது. கருத்தரித்தலின் போது விந்தணுவின் தரமும் முக்கியமாகிறது.
உலக சுகாதார அமைப்பின்படி (WHO) மி.லி.க்கு 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது 39 மில்லியன் விந்தணுக்கள் இருப்பது, பெண்ணை கருவுறச்ச்செய்து குழந்தை உண்டாக்க போதுமானது. 10 மில்லியனுக்கும் குறைவாக இருப்பது ஆண்களில் குறைபாட்டை உண்டாக்கலாம். இது மலட்டுத்தன்மை எனப்படுகிரது. தற்போது இந்தியாவில் 27.5 மில்லியன் தம்பதிகள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.விந்தணு எண்ணிக்கை தகவல்கள்
மனித விந்தணு புதிய உயிரை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகித்து, வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது. விந்தணு மற்றும் விந்தணு எண்ணிக்கை தொடர்பாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இருக்கின்றன. விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

நல்ல உடல் பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
புகைப்பிடிப்பதை குறைப்பது. அதிகமாக புகைப்பிடிப்பது, விந்தணு குறைவு மற்றும் அதன் தரத்தை பாதிப்பதாக கருதப்படுகிறது.
மேலும், குறைந்த விந்தணு கொண்டதாக கண்டறியப்படும் ஆண்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான குழந்தை பிறக்க, குறைந்தது 15 மில்லியன் விந்தணுக்கள் முதல் அதிகபட்சம் 39 மில்லியன் விந்தணுக்கள் தேவை. 10 மில்லியன் விந்தணுக்களுக்கு குறைவாக இருந்தால் குழந்தை பாதிப்புடன் பிறக்கலாம் என கருதப்படுகிறது.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் எளிய வழிகள்
குறைவான விந்தணு எண்ணிக்கை, உங்கள் துணை கர்ப்பமாக தடையாக இருக்கலாம் என்பதால் ஆபத்தானது. இது தம்பதியிடையே உளவியல் நோக்கிலான பாதிப்பை உண்டாக்கலாம். எனினும், இந்த விந்தணு குறைவு பாதிப்பை சரி செய்து கொள்வதற்கான வழிகளும் இருக்கின்றன. வீட்டிலேயே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவற்றில் சில வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

போதுமாக தூக்கம்
புகை பிடிப்பதைக் குறைப்பது
மன அழுத்தம் இல்லாமல் இருப்பது
போதுமான வைட்டமின் டி மற்றும் கால்சியம்
தீய கொழுப்புகளைக் குறைப்பது
விந்தணு எண்ணிக்கையை அதிகமாக்க கூடிய எளிதான சில செயல்களை நீங்கள் செய்யலாம். நீங்கள் உட்கொள்ளும் உணவு மூலமும் விந்தணு எண்ணிக்கையை உயர்த்திக்கொள்ளலாம்.

1. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உணவுகள்

விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை உயரத்த உதவும் பல வகையான உணவுகள் இருக்கின்றனர். அவற்றில் சில இங்கே தரப்பட்டுள்ளன. கீழே உள்ள உணவுகள், உங்கள் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்தும். இவை ஊட்டச்சத்து மிக்கவை.

சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு)
முழு தானிய பிரெட்
பழுப்பு அரிசி
வாழைப்பழம், டார்க் சாக்லெட்
நத்தை, சால்மன் மீன் போன்ற கடல் உணவு
வைட்டமின் டி கொண்ட பால் பொருட்கள்
பூண்டு
மஞ்சள்
கீரை
குறிப்பு: உங்கள் உணவில் இவற்றை சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தவும். இது உங்கள் விந்தணு எண்ணிக்கையை உயர்த்தும்.

2. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் உடல் பயிற்சிகள்

வீட்டு சோதனை அல்லது ஆய்வுக்கூட சோதனையில் உங்கள் விந்தணு குறைவாக இருப்பது தெரிய வருவது மோசமானது என்றாலும், அதற்காக உங்கள் தந்தையாக ஆக முடியாது என்று பொருள் இல்லை. உங்களுக்கு மிகவும் தேவை நம்பிக்கை தான். ஏனெனில் எதிர்மறை விஷயங்கள் விந்தணு எண்ணிக்கையை பாதிக்கும். உங்கள் தந்தையாக முடியாது எனில், மருந்துகளால் இதை மாற்ற முடியும் என்பதே உண்மை.

மருத்துவ நோக்கில் பார்த்தால், புதிய விந்தணுவை உண்டாக்க உடலுக்கு 3 மாதங்கள் தேவைப்படுகிறது. உங்கள் வாழ்வியலை மாற்றிக்கொண்டால் இதையும் மாற்றலாம். உங்கள் விந்தணு எண்ணிக்கையை மேம்படுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய சில எளிய உடல் பயிற்சிகள் இதோ:

ஓட்டம்: தினமும், 30 முதல் 45 நிமிடங்கள் வரை மிதமாக ஓடுவது.
டிரெட்மில் ஓட்டம்: வாரம் 3 நாட்கள் மிதமாக ஓடுவது. 30 முத்ஹல் 45 நிமிடங்கள் இருந்தால் நல்லது.
யோகா: சர்வாங்க ஆசனம் (தோள் ஆசனம்); தனூர் ஆசனம் (வில் போல); ஹலாசனம் (உழுவது); பஸ்சிமோத்தாசனம் (முன்பக்கம் குனிதல்); கும்பக ஆசனம் (கையை ஊன்றி இருப்பது); புஜங்க ஆசனம் (நல்ல பாம்பு போல); பாத ஹஸ்தாசனம் (முன்பக்கம் வளைந்து நிற்பது); படகு ஆசனம் (படகு போல).
மேலே உள்ள அனைத்து உடல் பயிற்சிகளும் உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இதை இப்போதே செய்யத்துவங்குவது நல்லது. ஆனால் அதிக உடல்; பயிற்சியும் விந்தணு எண்ணிக்கையை குறைக்கலாம் என்பதால் மிதமாக மேற்கொள்ளவும்.

குறைந்த விந்தணு எண்ணிக்கையைக் கண்டறிதல்
உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் மாற்றத்தை உணரும் போது தான் விந்தணு குறைபாடு தெரிய வருகிறது. என்றாலும் இதை முன்கூட்டியே உனரக்கூடிய சில வழிகள் உள்ளன.

உங்கள் துணையை கர்ப்பமாக்குவதில் சிக்கல் ஏற்படுவது
உங்களால் ஏன் தந்தையாக முடியவில்லை என்பதை அறிய மருத்துவர் செய்யும் பொதுவான விந்தணு எண்ணிக்கை சோதனை
மருத்துவ சோதனைகள் மற்றும் நோய்க்கூறு ஆய்வுகள் மூலமும் குறைவான விந்தணு பிரச்சினையை கண்டறியலாம். மருத்துவ சோதனைகள் என்பது, உங்கள் குறியை பரிசோதிப்பது, நீண்ட கால நோய் பாதிப்பு கண்டறிவது, காயங்கள், அறுவை சிகிச்சை பாதிப்பு கண்டறிதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பிரச்சினையை கண்டறியும் முதல் கட்டமாகும். அதன் பிறகு டாக்டர் ஆய்வு செய்வார். இந்த நிலைக்கு ஏற்ப டாக்டர் சிகிச்சை அளிப்பது அடுத்த கட்டம். குறைந்த விந்தணு பிரச்சினையை டாகடர்கள் கண்டறியும் வழிகள்:

விந்தணு ஆய்வுகள், முடிவுகள்
இறுதியாக விந்தணு ஆய்வு சோதனை மூலம் விந்தணு எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, இந்த செயல்முறையின் போது விந்தணு நுண்ணோக்கி மூலம் ஆய்வு செய்யப்பட்டு, ஒரு சதுரம் அல்லது ஒரு கிரிட்டில் எத்தனை விந்தணு இருக்கிறது என கணக்கிடப்படும். இதற்காக கம்ப்யூட்டரும் பயன்படுத்தப்படலாம். இந்தியாவில், மத நம்பிக்கை காரணமாக, விந்தணு விஷேச வகை ஆணுறை வழியே சேகரிக்கப்படலாம். அனைத்து விந்தணுவும் சேகரிக்கப்படுவதை உறுதி செய்ய டாக்டர்கள் கீழ்கண்டவற்றை பரிந்துரைக்கலாம்.

வெளியாகும் விந்தணு ஆணுறையில் சரியாக சேகரிக்கப்படுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் குறைந்தது 2 நாட்களுக்கு விந்தணு வெளியாவதை கட்டுப்படுத்த வேண்டு. அதிகபட்சம் 11 நாட்களுக்கு மேல் கட்டுப்படுத்தக் கூடாது.
உங்கள் முதல் மாதிரி சேகரிக்கப்பட்ட 2 வாரங்கள் கழித்தே இரண்டாவது சுற்று மாதிரி சேகரிக்கப்படும்.
Note: உங்கள் விந்தணு எண்ணிக்கை மிலிக்கு 15 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால் தந்தையாகும் வாய்ப்பு குறைவு. ஒரு சில விதிவிலக்கான சூழல்களில் ஆண்களில் சிலருக்கு விந்தில் விந்தணுக்களே இல்லாமல் இருக்கலாம். இந்த நிலை, அசூஸ்பெர்மியா எனப்படுகிறது.

குறைந்த விந்தணு சிகிச்சை

குறைந்த விந்தணு சிகிச்சை உங்கள் கருத்தரித்தல் தன்மையை 70 சதவீதம் வரை மேம்படுத்திக்கொள்ள உதவுகிறது. இருப்பினும், குழந்தை பிறப்பதில் பல்வேறு மருத்துவ அம்சங்கள் உள்ளன. ஒரு சில விநோத சூழல்களில், குறைந்த விந்தணு எண்ணிக்கையுடன் தந்தையானவர்களும் இருக்கின்றனர். அதே போல அதிக விந்தணு கொண்டும் தந்தையாக முடியாதவர்களும் இருக்கின்றனர்.

இந்த உலகிற்கு புதிய உயிரை கொண்டு வருவது என்பது புதிர்கள் நிறைந்தது. விந்தணு இயக்கம் மிகவும் முக்கியம். உங்கள் டாக்டருக்கு கிடைக்கும் சோதனை முடிவு அடிப்படையில் உங்களுக்குக் கீழ்கண்ட சிகிச்சைகளில் ஒன்று பரிந்துரைக்கப்படலாம். குழந்தை பெறுவதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டிய சிகிச்சை முறைகள் சில:

ஸ்க்ரோடல் அல்ட்ரா சவுண்ட்:
இந்த சோதனையில், அதிக அலைவரிசை கொண்ட ஒலி, அலைகள் உங்கள் விரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்படுகிறது. பிரச்சினையை கண்டறிய டாக்டர்கள் மேற்கொள்ளும் முதல் சோதனை இது. பிரச்சினை என்ன என அறிந்தவுடன் டாக்டர்கள் அடுத்த கட்ட சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

ஹார்மோன் சோதனை:
குறைவான விந்தணு சோதனைக்கான இரண்டாவது பரிசோதனை இரத்த பரிசோதனையாகும். ஒருங்கிணைந்த செக்ஸ் வளர்ச்சி மற்றும் விந்தணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்யூட்டரி கிளாண்ட் உள்ளடக்கிய விறையில் உற்பத்தியாகும் ஹார்மோன்களை கண்டறிய இது உதவும்.

வெளியான பிறகு ஆய்வு:
இந்த சோதனை உங்கள் விந்தணு குறியில் இருந்து வெளியேறிச்செல்வதற்கு பதில், பின்னோக்கி வருகிறதா என அறிவதற்கானது. குறிப்பாக விந்து வெளியாகும் போது இவ்வாறு நிகழ்கிறதா என சோதிக்கப்படும். உங்கள் பிரச்சினை தன்மையை டாக்டர் புரிந்து கொள்ள இந்த சோதனை உதவும்.

மரபணு சோதனைகள்:
சில நேரங்களில், விந்தணு குறைப்பாட்டிற்கு மரபணு காரணமாக இருக்கலாம். உங்கள் ஒய் குரோமோசோமில் ஏதேனும் மாற்றம் உள்ளதா அல்லது ஏதேனும் மரபணு கோளாறு உள்ளதா என்பதை இரத்த பரிசோதனை மூலம் அறியலாம். பிரச்சினையின் வேரை அறிய இந்த சோதனை டாக்டர்களுக்கு தேவைப்படலாம். இந்த சோதனைக்காக உங்கள் விரையில் இருந்து மாதிரி எடுக்கப்படும். உங்கள் விந்தணு வழக்கமாக இருக்கிறதா என அறியவும் இது உதவும்.சில நேரங்களில், இந்த சோதனையின் விளைவாக விந்து பாய்வது தடைபடலாம். எனினும், அதீதமான சூழல்களில் மட்டுமே இது மேற்கொள்ளப்படுகிறது.

டிரான்ஸ்ரெக்டல் அல்ட்ராசவுண்ட்:
விந்தணுவை கொண்டு செல்லும் பாதையில், புரோஸ்டேட்டில் ஏதேனும் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறிய மலக்குடலில் சிறிய துண்டு போன்ற கருவி செலுத்தப்படுகிறது. வால்வுகள் வழியே விந்து பாய்வதை கண்டறிய இந்த சோதனை உதவுகிறது.

அறுவை சிகிச்சை
மிகவும் அரிதான நிலையில், விந்தணு குறைபாடு மற்றும் விந்து போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய அறுவைசிகிச்சை செய்யப்படலாம். உதாரணமாக, வெரிகோசிலி அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகிறது. விந்து இல்லாத அரிதான சூழலில் விரை மற்றும் இதர வழிகள் மூலம் விந்து எடுக்கப்படுகிறது.

இன்ஃபெக்‌ஷன் சிகிச்சை:
பொதுவாக குறைந்த விந்தணு பிரச்சினையை சரி செய்ய ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது உற்பத்தை பாதையில் உள்ள இன்பெக்‌ஷனை குணமாக்கும் என்றாலும், கருத்தரித்தல் திறனை மீட்காது. எனவே இந்த சிகிச்சை இன்ஃபெக்‌ஷனை நீக்க மட்டுமே பயன்படுகிறது.

உடலுறவு தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை:
கருத்தருத்தல் சிக்கலை தீர்க்கும் வகையில் ஆலோசனை அல்லது மருந்துகள் வழங்கப்படும். எனினும், முன்கூட்டியே விந்து வெளியாகுதல் அல்லது செயலின்மைக்கு மட்டுமே இந்த சிகிச்சை பொருந்தும்.

ஹார்மோன் சிகிச்சை:
உங்கள் டாக்டர் ஹார்மோன் சிகிச்சையைப் பரிந்துரைக்கலாம். அதிக அல்லது குறைவான ஹார்மோன் அளவால் கருத்தரித்தல் பிரச்சினை இருந்தால் மருந்துகள் வழங்கப்படும். ஹார்மோன் உற்பத்தி மற்றும் உடலில் அதன் பயன்பாடு விகிதத்தைப் புரிந்துகொள்ளவும் டாக்டர்களுக்கு இது உதவும்.

அசிஸ்டட் ரீப்ரட்க்டிவ் டெக்னாலஜி:
இது ஏடிஆர் என அழைக்கப்படுகிறது. வழக்கமான வெளியாகுதல் அல்லது அறுவை சிகிச்சை வெளியாகுதல் மூலம் விந்தணு பெற்று அல்லது சில நேரங்களில் விந்து தாணம் பெற்று விந்தணு பெறுதலாகும். இந்த விந்தணு பெண் குறிக்குள் செலுத்தப்படுகிறது அல்லது ஐவிஎப் மூலம் பொருத்தப்படுகிறது. இது துணையை கர்ப்பமாக்க உதவும்.

விந்தணுவை அதிகரிக்க மருந்துகள்:

கீழ் கண்ட எளிய வழிகள் மூலம் கருத்தரித்தல் வாய்ப்பை அதிகமாக்கி கொள்ளலாம். இதற்கு வாழ்வியலில் சிறிய மாற்றங்கள் தேவை. இதற்காக டாக்டர்கள் பரிந்துரைக்கக்கூடிய மருந்துகள் சில:

விந்தணு அதிகரிக்க வைட்டமின்கள் & ஊட்டச் சத்துகள்

குறைந்த விந்தணு கருத்தரித்தல் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் உங்கள் துணை கர்ப்பமாகாமல் போகலாம். எனினும், இதை மாற்ற சில ஊட்டச்சத்துகள் உதவுகின்றன.

டி-அஸ்பார்டிக் சப்ளிமண்ட்ஸ்:
இது ஊட்டச்சத்து மருந்தாக விற்கப்படும் ஒரு வகை அமினோ அமிலம். உங்கள் உடலில் உள்ள புரதச்சத்து அமைப்பை சீராக்க உதவுகிறது. 3 கிராம் டி- ஏ சப்ளிமண்ட் எடுத்துக்கொண்டால் உடலில் டெஸ்டஸ்ட்ரோன் அளவு 42 சதவீதம் உயர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவர்கள் ஆலோசனை பெற வேண்டும்.

வைட்டமின் சி:
வைட்டமின் சி எடுத்துக்கொள்வது, விந்தணு உற்பத்தை தடை செய்யும் சில தீய விளைவுகளை உடல் எதிர்கொள்ள உதவும். 2 மாதம், தினமும் இரு வேளை, 1000 மிகிராம், வைட்டமின் சி எடுத்துக்கொண்ட ஆண்களில் விந்தணு இயக்கம் 92 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதிப்புக்குள்ளாகும் விந்தணு எண்ணிக்கையையும் இது குறைக்கிறது. ஆண்டிஆக்சிடெண்டான வைட்டமின் சி எடுத்துக்கொள்வது ஆண்களில் கருத்தரித்தல் தன்மையை அதிகரிக்கும்.

துத்தநாகம்:
மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளில் துத்தநாகம் உள்ளது. போதுமான அளவு துத்தநாகம் இருந்தால் கருத்தரித்தல் தன்மை அதிகரிக்கும். போதுமான அளவு துத்தநாகம் ஆண்களில் டெஸ்டஸ்ட்ரோன் அளவு மற்றும் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நீங்கள் அண் மலட்டுத்தன்மையை எதிர்கொண்டிருந்தால், எதிர்காலத்தில் தந்தையாக விரும்பினால், உங்கள் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளியாவதை தடுக்கும் மெட்லைப்பின் பக்க விளவில்லாத மூலிகை மருந்துகள் உங்களுக்கு உதவும். மருந்துகள் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் டாக்டர் சந்திப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்துகொண்டு, மெட்லைபில் ஆலோசனை பெறலாம்.

கேள்விகள்

விந்தணுவை அதிகரித்துக்கொள்ளும் வழிகள் தொடர்பான புரிதல் உங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும. மேலும் புரிதலுக்காக, இது தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்.

வீட்டிலேயே விந்தணு எண்ணிக்கையை சோதிப்பது எப்படி?
விந்தணு எண்ணிக்கையைக் கணக்கிட்டு சொல்லும் ஸ்பெர்ம்செக் பெர்டிலிட்டியை ஆர்டர் செய்யுங்கள். உங்கள் துணையை கர்ப்பமாக்க, மிலிக்கு குறைந்தது 15 மில்லியன் விந்தணுக்கள் தேவை என நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மாதாமாதம் இந்த எண்ணிக்கையைப் பரிசோதிப்பது நல்லது.

2. மலட்டுத்தன்மை உள்ளவர் அதிலிருந்து மீள முடியுமா?

மலட்டுத்தன்மையைச் சரியாக்கலாம். ஆனால் இதற்கு சில விஷயங்கள் தேவை. இந்த குறைக்கு மரபணு காரணமாக இருந்தால், இதை சரி செய்ய முடியாமல் போகலாம். மன அழுத்தம் அல்லது வாழ்வியல் சிக்கலால் ஏற்பட்டிருந்தால் இதை சரி செய்யலாம்.

3. ஆண் மலட்டுத்தன்மை அறிகுறிகள் என்ன?

மலட்டுத்தன்மையை உணர்த்தும் ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் போகலாம். துணையை திருப்திபடுத்த முடியாமல் போவது முதல் அறிகுறியாக இருக்கலாம். எனினும், முன்கூட்டி விந்து வெளியாகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் துணை கர்பமாவதில் சிக்கல் ஏற்படும் போதே இந்த குறை தெரிய வரும்.