சென்னை ஆர் கே நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை மங்கம்மாள் தோட்டம் தெருக்களில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வீடுகளின் உள்ளே கழிவுநீர் தேங்குவதாலும் சாலைகள் முழுவதும் கழிவுநீர் தேங்கி கிடைப்பதாலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் கழிவு நீர் அடைப்பு ஏற்படுவதனால் சாலைகளில் கழிவு நீர் ஓடுவது மட்டுமல்லாமல் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இதற்காக பல முறை சென்னை மாநகராட்சி கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லாததால் அப்பகுதி மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர் புகார் அளிக்கப்படும் பொழுது தற்காலிகமாக கழிவுநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர் ஆனால் நிரந்தரமாக கழிவுநீர் அடைப்பு ஏற்படாமல் இருக்க வழிவகைகளை செய்வதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் தற்போது மழைக்காலம் என்பதால் கழிவுநீர் அடைப்பு ஏற்படுவதால் வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் பெருகும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் இதனால் பல தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் திடீரென ஏற்பட்ட சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் வந்த புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டவர் கலைந்து விட்டனர்.