சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகள் கைது

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் தேவி(33). இவர் கடந்த 8 ஆம் தேதியன்று சோலையப்பன் தெருவில் நடந்து சென்றபோது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் 2 ஆயிரம் பணம் மற்றும் ஆவணங்கள் இருந்த கைபையை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக தேவி அளித்த புகாரின்பேரில் தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வழப்பறியில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வகுமார்(25), சங்கர் குமார்(25) ஆகிய இருவரையும் தண்டையார்பேட்டை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் கைபையையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.