சென்னை ஆர்கே நகர் தொகுதி கருணாநிதி நகர் பகுதியில் சுமார் 3,000 கிலோ மேல் மதிப்பு உள்ள அரசு ரேஷன் அரிசி கடத்தலுக்காக பதுக்கி வைத்திருப்பதாக ஆர்கே நகர் காவல் ஆய்வாளர் கொடி ராஜனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது அதனடிப்படையில் சோதனை செய்ததில் பிளாஸ்டிக் பையில் ரேஷன் அரிசி மூட்டை மூடையாக அடுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து சிவில் சப்ளை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த சிவில் சப்ளை காவல்துறையினர் அப்பகுதியில் அடுக்கி வைத்த அரிசி மூடைகளை இரண்டு லோடு ஆட்டோ மூலமாக பறிமுதல் செய்து சென்றனர். எங்கிருந்து கடத்தினார்கள்? பதுக்கி வைத்தது யார்? என்று சிவில் சப்ளை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே மாதத்தில் ஆர் கே நகர் தொகுதியில் இரண்டு இடத்தில் மூன்று டன்களுக்கு மேல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.