சென்னை ராயபுரம் தொப்பை தெரு மற்றும் கல்லறை சாலையில் சமூக விலகல் இன்றி பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கும் வகையில் செயல்பட்டு வந்த மளிகை கடை, இறைச்சி கடை மற்றும் ஐஸ் கிரீம் கடை ஆகியவற்றிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை மாநகராட்சியின் உரிமம் வழங்கல் அதிகாரி மற்றும் ராயபுரம் காவல் துறையினர் ஆகியோர் இந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் 3 நாட்களுக்கு பிறகு மாநகராட்யிடம் அனுமதி பெற்று கொண்டு கடைகளை திறக்குமாறு கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி 3 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.