சென்னை பெரம்பூரில் SDPI_கட்சியின் வட சென்னை மாவட்ட செயற்க்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ரஷீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் துவக்கமாக மாவட்டபொது செயலாளர் புஸ்பராஜ், வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இதில் மாவட்ட துணை தலைவர் காஜா மொய்தீன், மாவட்ட பொருளாளர் ஷாநவாஸ், சமூக ஊடக அணி தலைவர் அசாருதீன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் கரீம் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மருத்துவ கல்லூரியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டு மென்ற தீர்மானத்தின் மீதான விசாரணையை நான்கு வாரம் ஒத்தி வைத்த ஆளுநரை எதிர்த்து நடை பெறக்கூடிய அக்டோபர் 30 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வட சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு (ராயபுரம், ஆர்கே நகர், திருவொற்றியூர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர்) தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என மாநில நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டியும், தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இருபது பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவானது தேர்தலை எதிர்கொள்ள அமைப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தின் இறுதியாக மாவட்ட செயலாளர் கராத்தே யூசுப் நன்றியுரை ஆற்றினார்கள்.

மேலும் இக்கூட்டத்தில் அனைத்து தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.