சென்னை காசிமேடு இந்திராநகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குப்பன் என்கிற சொரி குப்பன் வயது 60 இவர் காசிமேடு பகுதியில் திமுக பிரதிநிதியாகவும் விசைப்படகு சங்கத் தலைவராகவும் இருந்து வருகின்றார் இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அட்டு ரமேஷ் வயது 44 மற்றும் சம்பத் வயது 25 இவர்கள் இருவரும் இணைந்து அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது இதனை பலமுறை குப்பன் அட்டு ரமேஷிடம் விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார் ஆனால் பேச்சைக் கேளாமல் அட்டு ரமேஷ் மீறி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது இதனால் கோபமடைந்த குப்பன் போலீசாரிடம் கஞ்சா விற்பனை செய்வதை கூறியுள்ளார் பின்னர் போலீஸ்க்கு தகவல் கொடுப்பதை அறிந்துகொண்ட அட்டு ரமேஷ் மற்றும் சம்பத் இவர்கள் இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து குப்பனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் பின்னர் கையில் அரிவாளுடன் நான்கு பேர் காசிமேடு பாலம் அருகே சென்றனர் அப்போது அந்த இடத்திற்கு வந்த குப்பனை நான்கு பேர் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் இதில் படுகாயமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காசிமேடு காவல்துறையினர் மற்றும் சென்னை மீன்பிடித் துறைமுகம் காவல் துறையினர் இணைந்து.

ரமேஷ்அட்டு ரமேசை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சம்பத் ராகேஷ் சந்தோஷ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கஞ்சா விற்பதை காவல்துறைக்கு காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.