இராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு நகரில் உள்ள
சீதாராமன் தெருவில் உள்ள
ஸ்ரீ சர்வசக்தி சீரடி சாய்பாபா டிரஸ்ட் கோயிலில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை ,மாலை 6 மணி அளவில் கலசாபிஷேகம் மற்றும் சொர்ணாபிஷேகம் அனைத்தும் பக்தர்களுடைய திருக்கரங்களால் சீரடி சாய்பாபாவிற்கு செய்யப்பட்டது

மேலும் சாவடி ஊர்வலம்,ஆரத்தி, சாயி பஜனை சிறப்பாக நடைபெற்றது, இதில் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் சாய் ஆதித் அவர்கள் அறக்கட்டளையின் ஓராண்டு நிகழ்வுகளை வாசித்தார்.

டிரஸ்ட் தலைவர் சாய்பாலசுந்தரம், து.தலைவர் வாலாஜா சாய்சுரேஷ்ஜெயின் பொருளாளர் சாய்பத்ரிநாத், சாய்வெங்கடேசன், சாய்பரணி சாய்குமரன், சாய்சந்தோஷ், சாய்சுந்தர்ராஜன் ஐயர், சரவணன், வாலாஜா சாய்WG.முரளி , சக்திவேலன், பாடகர் சுந்தர், விஜய்டிவி புகழ் “கானாகவி” கஜேந்திரன்,மனோகர், திரளான பெண்சாயி பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பஜனை பாடல்கள் பாடி பூஜைகளை சிறப்படைய செய்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சாய் பாபாவின் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்…