சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை பாரதி நகரைச் சேர்ந்தவர் குமார் (வயது40) இவர் அப் பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார் வேலை முடிந்து மணலி விரைவுச்சாலை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த 3 மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி தன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்று மிரட்டி கேட்டு உள்ளனர் குமார் தன்னிடம் பணம் ஏதும் இல்லை என்று கூறி உள்ளனர் மர்மநபர்கள் குமாரின் பாக்கெட்டில் இருந்த 450 ருபாய் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே சொன்னால் கொலை செய்வதாக மூன்று நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர் பாதிப்படைந்த குமார், சம்பவம் தொடர்பாக ஆர்கேநகர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார் புகாரின் அடிப்படையில் அப் பகுதியில் பதுங்கியிருந்த மர்ம நபர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில்

ஆர் கே நகர் தொகுதி கொருக்குப்பேட்டை கார்நேஷ் நகர் குடியிருப்பில் வசிக்கும் தமிழ்ச்செல்வனின், மகன் கோடீஸ்வரன்(வயது23) அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமாரின், மகன் அஜித்(வயது20) கொருக்குப்பேட்டை ஜே ஜே நகர் பகுதியில் வசிக்கும் சேகரின், மகன் பரத்(வயது19) இவர்கள் 3 பேரும் ஒன்றிணைந்து இச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இவர்களிடமிருந்து 7 பட்டா கத்திகளை பறிமுதல் செய்த ஆர் கே நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.