சென்னை திருவொற்றியூரில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருவொற்றியூர் தேரடி வடக்கு மாட வீதி பகுதியை சேர்ந்தவர் மோகன் தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தபோது சுவர் வழியாக எதிரி குதித்த மர்ம நபர் பீரோவில் இருந்த 32 ஆயிரம் ரூபாய் பணம் விலை உயர்ந்த 2 செல்போன்களை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளான் பின்னர் பக்கத்து வீட்டிற்கு சென்ற மர்ம நபர் அங்கிருந்த பணங்களையும் ஜன்னலோரம் இருந்த செல்போன்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு சுவர் ஏறி குதித்து சாலையில் வேகமாக ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது சிசிடிவி கேமராக்கள் பதிவான காட்சிகளை கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார் தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளை நிகழ்ந்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.