சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு சாலையில், நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து. துணி வியாபாரங்கள் செய்து வருவதாக நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உடனடியாக நடை பாதைகளை சுத்தம் செய்யுமாறு மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்தது.

உதவி செயல் பொறியாளர் பழனி தலைமையில். 4 உதவி பொறியாளர்கள் 10க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினர் அதை தொடர்ந்து நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் அப்பகுதியில் நிறுவப்பட்டது.

ராயபுரம், மற்றும், தண்டையார்பேட்டை, காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்களுக்கும். பொதுமக்களுக்கும். பாதுகாப்பில், ஈடுபட்டனர்.

அறிவிப்பு பலகை நிறுவப்பட்டதை பார்த்த நடைபாதை ஆக்கிரமிப்பு வியாபாரிகள் 52 ஆவது பகுதி உதவி பொறியாளர் அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை இட்டனர்.

அப்போது உதவி பொறியாளர் நீதிமன்றத்தின் அறிவிப்பை, கையில் வைத்துக்கொண்டு. விதிமுறைகளை கூறினார். ஆனால் வியாபாரிகள் அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்வதாகவும், தீபாவளி வருவதை முன்னிட்டு எங்களை குறிவைத்து பாதாளத்தில் தள்ளுவதாக. உதவி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே தீ குளிப்பதாகவும். சாலைமறியலில் ஈடுபடுவதாகவும். உதவி பொறியாளர் இடம் மிரட்டி வந்த வியாபாரிகள். திடீரென சாலையில் அமர்ந்து 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது விரைந்து வந்த ராயபுரம் காவல் ஆய்வாளர் காசியப்பன். தலைமையிலான காவலர்கள். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை. அப்புறப்படுத்தி அவர்களிடம் காவல் ஆய்வாளர் காசியப்பன். கூறியதாவது. நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்க வேண்டும். அதிகாரிகள் அவர்களின் மேலதிகாரி உத்தரவின்படி பணி செய்வதை தடுக்க கூடாது. மீறினால் சட்டம் ரீதியான வழக்கு பதிவு செய்யப்படும். என்று அறிவுரை கூறினார் உடனடியாக வியாபாரிகள் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்.