ஒரே வீட்டில் 3 முறை மர்ம நபர்கள் நுழைந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

 

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட வினோபா நகர் மெயின் தெருவில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை மர்ம நபர்கள் ஒரே வீட்டில் நுழைந்து மிரட்டி வருகின்றனர் கடந்த வாரம் மொட்டை மாடியில் தனியாக இருந்த பெண்ணிடம் கதவைத் தட்டி கதவை திறக்குமாறு உன்னை பற்றிய தகவல் எல்லாம் எனது செல்போனில் இருக்கும்படி மர்ம நபர் ஒருவர் மிரட்டி உள்ளார் அந்தப் பெண் கதவைத் திறக்காமல் மௌனம் சாதித்ததால் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை அடுத்த தளத்தில் பூட்டை உடைத்து 5 ஆயிரம் ரூபாய் பணமும் உண்டியல் சில பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் அதை தொடர்ந்து இன்று அதே வீட்டில் முதல் மாடியில் வசித்து வரைபவர் முகமது மீரான் (வயது 36) பெரம்பூர் திருவிக நகர் பகுதியில் உலர் பழங்கள் கடை நடத்தி வருகிறார் தனது மனைவி பிள்ளைகளுடன் வெளியே சென்று வீடு திரும்புகையில் வீட்டின் கதவு உடைந்த நிலையில் இருந்தது உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் கதவு உடைந்து திறந்த நிலையில் இருந்தது அதில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணம் வெளிநாட்டு பணம் மற்றும் சில பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது உடனடியாக ஆர்கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இச்சம்பவம் குறித்து ஆர் கே நகர் காவல் நிலைய குற்ற பிரிவு காவல்துறையினர் அப் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதே வீட்டின் அருகில் பட்டப்பகலில் ஒரு வாலிபரை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்தப் பகுதி முழுவதும் பீடி சிகரெட் புகைப்பது போல் கஞ்சாவை தைரியமாக புகைத்து வருகின்றனர் இதனால் அப்பகுதி மக்கள் நடமாடுவதற்கு அச்சம் அடைகின்றனர்.

இதுபோல் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பலமுறை காவல் நிலையத்தில் வாய்மொழி புகார் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தாலும் ஆர்கேநகர் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.