• சென்னை, தண்டையார் பேட்டை, நேதாஜி நகர் , மூன்றாது தெருவில், சிலருக்கு, கொரோனா அறிகுறி இருந்ததால், அந்த பகுதிக்கு, மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டன, இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு, 200 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திடீரென அங்குள்ள சாலையில் அத்துமீறி அமர்ந்து போராட்டம் நடத்தினர். அதில், ரமலான் நோன்பு உள்ளது, அதனால், நாங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று, நோன்பு கஞ்சி வாங்க வேண்டும், ஆகையால், எங்கள் பகுதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், தகவல் கிடைத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்பு லட்சுமி தலைமையிலான ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து வந்து, கொரோனா நோய் தொற்றின் வீரியம் குறித்து விளக்கி, அவர்களை சமாதானம் படுத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர்,இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன.

.