வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைத்த பேரிகார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம்.வாகன ஓட்டிகள் அச்சம்.

வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைத்த பேரிகார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். வேலூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பிறகு சாலை விரிவாக்கம் செய்யவில்லை. இதனால் மாநகரின் பல பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக வேலூர். ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இதனால் இச்சாலை எப்போதும் மனிதர்கள் மற்றும் வாகனங்களின் நெரிசலும் அதிகமாக காணப்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர். ஆற்காடு சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஆற்காடு சாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றுவதற்காக சாலையின் நடுவே பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிகார்டுகள் வரிசையாக வைக்காமல் இடைவெளி அதிகமாக உள்ளதால், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்.வேலூர்.ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பேரிகார்டுகள் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எதிரெதிர் திசையிலும், சாலையின் குறுக்கேயும் செல்வதால் அவ்வழியாக வாகனங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகள் தொடர்ச்சியாக வைக்க வேண்டும் அல்லது இடைவெளி உள்ள பகுதியை கயிற்றால் கட்ட வேண்டும்’ என்றனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…