சென்னை ஆர்கே நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள ஆரணி ரங்கன் தெரு, பெருமாள் கோவில் தோட்டம், பி.கே. கார்டன், கிருஷ்ண கிராமணி தோட்டம், செல்லப்பா கார்டன், இளைய தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சுமார் 750 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி தொகுப்பினை அதிமுக சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் வழங்கினார். இதில் ஆர்கே நகர் பகுதி கழக செயலாளர் ஜனார்த்தன், மாவட்ட கழக பொருளாளர் கணேசன், ஏழு மலை, சீனிவாசன், விநாயகமூர்த்தி, மகேஷ்குமார், பிரபாகரன், இளவரசன், நிர்மல்குமார், பாபு ,மனோ, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.