144 தடை உத்தரவினால் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் இன்றி கஷ்டப்படும் சூழல் உருவாகியுள்ளது அதில் ஒரு பகுதியாக வடசென்னை பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த 40 நாட்களுக்கு மேல் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர் மாவட்ட செயலாளருக்கு உதவியாக அப்பகுதியில் வட்ட செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் என கட்சி நிர்வாகிகள் சுமார் 200நபர்களுக்கு மேற்பட்டோர் உறுதுணையாக மக்கள் சேவையில் பணியாற்றி வருகின்றனர். சேவை செய்து வரும் கட்சி நிர்வாகிகள் குடும்பத்திற்கு உதவும் வகையில் இன்று 241 நபர்களுக்கு அரிசி பருப்பு எண்ணெய் போன்ற உணவுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அடங்கிய தொகுப்பை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் வழங்கினார் உடன்.
பகுதி செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட பொறுப்பாளர் கணேசன், வட்ட செயலாளர்கள் நரசிம்மன், வேலு, வேல்முருகன், ராமமூர்த்தி, விநாயகமூர்த்தி, புருஷோத்தமன்,சிவா, அருண், பிரசாத், நித்யானந்தம், பெருமாள், என கட்சி நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர். 40 நாட்களாக மக்களுக்கு மட்டுமே உதவிக்கரம் நீட்டிய மாவட்டச் செயலாளர் இன்று கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் உணவு பொருட்கள் வழங்கியது மிகுந்த மகிழ்ச்சி என நிர்வாகிகள் தெரிவித்தனர்.