சென்னை: கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள வீரர்களாக செயல்படும் போலீசார் மருத்துவர்கள் துப்புரவு பணியாளர்கள் செவிலியர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தவும் அவர்களை கௌரவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, செங்குன்றம் உதவி கமிஷனர் அருண்குமார், கண்ணகி நகர் காவலர் லூயிஸ் ராஜ், உளவுப் பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஆயுதப்படை போலீஸ் தனசேகர், தாவூத் பாஷா, சேலையூர் காவலர் பத்மநாபன், ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு சென்னை கோட்டையில் சிவப்பு கம்பளம் விரித்து ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக 7 பேருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.