வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மிட்ஷ்பிஷி
தொழிற்சாலை நிறுவனம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வார்டு
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து
வைத்தார்கள்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மிட்ஷ்பிஷி
தொழிற்சாலை நிறுவனம் சார்பில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புணரமைக்கப்பட்ட வார்டு
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று
திறந்து வைத்தார்கள்.
வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் மிட்ஷ்பிஷி தொழிற்சாலை நிறுவனம்
சார்பில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிகிச்சைக்கான புரணமைக்கப்பட்ட வார்டில் 136
கட்டில், மெத்தை, குளுக்கோஸ் ஸ்டாண்ட், நவீன படுக்கை வசதிகளுடன் கூடிய பிரிவுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். மேலும் நோயாளிகளின்
சிகிச்சைக்காக விரைவில் எம் ஆர் ஐ ஸ்கேன் வசதி வரும் என மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருந்தக இணை இயக்குநர் மரு.யாஸ்மின், மாவட்ட
கண்காணிப்பாளர் திரு.சிங்காரவேலு, மிட்ஷ்பிஷி கம்பெனியின் டைரக்டர்கள், நிர்வாகிகள்,
மருத்துவர்கள், ஊழியர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..