ரஜினி மக்கள் மன்றம் பஹ்ரைன் நாட்டின் சார்பில் ரஜினியின் 45 ஆண்டுகள் திரை துறையில் வந்ததை கொண்டாடும் விதமாக தமிழ்நாட்டை சேர்ந்த சிதம்பரம் (பரங்கிப்பேட்டை) யை சேர்ந்த பாபு, பிராபகரன்,சதிஷ், பார்த்திபன், என்கிற சகோதர்களுக்கு வேலை இல்லாமல் ஊருக்கு போக முடியாமல் அவதிப்பட்டு கொண்டு இருந்தார்கள். அவர்கள் ரஜினி மக்கள் மன்றம் பஹ்ரைன் மன்றத்தை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்கள். மன்றத்தின் செயலாளர். சுரேஷ் காலடி, துணை செயலாளர் சுதிர், இனை-செயலாளர். எம்.என். ரமேஷ், ஆகியோர் அவர்களுக்கு தாயகம் திரும்ப ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். அவர்கள் நான்கு பேருக்கும் உண்டான விமான டிக்கெட் செலவு 410 பஹ்ரைன் தினார் அதாவது இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 90.000ஆயிரம் ஆகும். அவர்கள் ரஜினி மக்கள் மன்றம் பஹ்ரைன்னுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர். எங்கள் வாழ் நாளில் இதை மறக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.