சென்னை: பெரம்பூர் செம்பியம் பகுதியில் தீயணைப்புத் துறை சார்பாக வடக்கு மண்டல அதிகாரி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 60 தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் 20 தீயணைப்பு அலுவலக அதிகாரிகள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்காக. தீபாவளி அன்று தீ விபத்து இல்லாத தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்தப் ஊர்வலம், பெரம்பூர் செம்பியம் பகுதியில் ஆரம்பித்து மதவரம் ஐ ரோடு வழியாக வியாசர்பாடி தீயணைப்பு நிலையம் வரை கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.