திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில். எம்.கல்யாணசுந்தரனார் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு
1922 ஆம் ஆண்டு டிசம்பர் 19ந் தேதி பிறந்த பேராசிரியரின் இயற்பெயர் இராமையா.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹனர்ஸ் படிப்பை படித்தவர் இது கலைமுதுவர் பட்டத்திற்கு இணையானது.

பெரியாரிடம் சுயமரியாதையைக் கற்றிருந்த ராமையா,
தனித்தமிழில் பெயர் சூட்ட விரும்பி, தனது பெயரை அன்பழகன்’ என்று மாற்றிக்கொண்டார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த அன்பழகன்,
அதன்பிறகு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

பேராசிரியராக இருந்த போதும்,
இயக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்பழகனை, பேரறிஞர்அண்ணா
பேராசிரியர் தம்பி என்று அழைத்தார்.