செங்கல்பட்டு மாவட்டம் மறைமைலைநகரில் அஜித்குமாரின் 49 வது பிறந்த நாள் வரும் மே 1ஆம் தேதி வருவதையொட்டி அஜித்தின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட மறைமலைநகர் அஜித் ரசிகர் இயக்கம் சார்பில் தீவிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஆலோசனை கூட்டம் மறைமலைநகரிலுள்ள இராணி பேலஸில் இயக்க முன்னோடி குரோம்பேட்டை அஜித்ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கௌரவத்தலைவர் வேலு (எ) வேலாயுதம் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் மறைமலைநகர் தலைமை நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மே 1ஆம் தேதியன்று நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளில் நலத்ததிட்டங்கள் வழங்கும் விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் தையல் மிஷின்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், இஸ்திரி பெட்டிகள், அரிசி மற்றும் வேட்டி சேலைகள், பிளாஸ்டிக் குடங்கள் இன்னும் பல பொருட்கள், வழங்கப்பட உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மறைமலைநகர் நகர தலைவர் பிரதீப், நகர செயலாளர் எம்.எஸ்.கே.செந்தில்குமார், நகர பொருளாலர் எஸ்.ஸ்ரீராம் மற்றும் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.