சென்னை இராயபுரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ராயபுரம் காவல்துறையினர் குளிக்க வைத்து அவருக்கு புத்தாடை அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை இராயபுரம் N.R.மேம்பாலம் அருகே வடக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ரோந்து காரில் சென்று கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக மனநல பாதிக்கப்பட ஒருவர் சாலை ஓரத்தில் இருந்ததை பார்த்த இனை ஆனையர் பாலகிருஷ்ணன் மனநல பாதிக்கப்படவரை மீட்டு மனநல காப்பகத்தில் ஒப்படைக்க இராயபுரம் உதவி ஆணையர் தினகரனுக்கு தகவல் தெரிவித்தார் இது குறித்து இராயபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்து சென்ற தலமை காவலர் சந்திரசேகர், ஆயுதப்படை காவலர் ஜாவித், பாஷா, ஊர் காவல் படை வீரர் அருண், பாலாஜி, மனநல பாதிக்கப்படவரை காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்று பின்னர் அருகில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்று தலை மூடி சீர் செய்து மற்றும் சேவிங் செய்து பின்னர் குளிக்க வைத்து புத்தாடை வாங்கி அணிவித்தார் இதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் காவல்துறையினரின் செயலை பாராட்டினர்.