சென்னை திருவொற்றியூர் அருகே கடற்கரையில் கருப்பு ஆனந்த் (வயது 45) என்பவரது பிணம் கரை ஒதுங்கி கிடந்தது. இவர் மீது திருட்டு வழிப்பறி உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளது இதுகுறித்து தகவலறிந்த திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி, தலைமை காவலர் சரவணன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் தலை கழுத்து பகுதிகளில் காயங்களும் கத்திக்குத்துகளும் இருந்தது

இதையடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உத்தரவின் பேரில் தனிப்படை காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள கல்பனா என்ற பெண்ணுடன் ஆனந்த் கடந்த 20 வருடங்களாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. அதே வீட்டில் தாய் தந்தை இல்லாத இம்ரான் (வயது 25) என்பவரும் இருந்துள்ளார் இவர் இருவரையும் அம்மா அப்பா என்று அழைப்பதாக கூறப்படுகிறது ஆனந்த் பல்வேறு குற்ற வழக்குகளில் இம்ரானையும் சேர்த்து போலீசில் சொல்லிவிடுவாராம் இதனால் இருவரும் அடிக்கடி சிறைக்கு சென்றுள்ளனர் சம்பந்தமே இல்லாமல் பல வழக்குகளில் தன்னை ஆனந்த் மாட்டி விடுகிறாரே என்ற கோபத்தில் இம்ரான் ஆனந்த் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் ஆனந்த் நீண்ட நாட்களுக்குப் பின்பு கல்பனா வீட்டுக்கு வந்துள்ளார் அப்போது நாய் குறைக்கவே ஏற்கனவே குடி போதையில் இருந்த ஆனந்துக்கும் இம்ரானுக்கும் பழைய பிரச்சனை குறித்து வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரையொருவர் விரட்டி சென்று உள்ளனர் கடற்கரையோரம் சென்றபோது ஆனந்த் இம்ரானை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார் அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆனந்த் தலையில் இம்ரான் அடித்துள்ளார் மேலும் ஆனந்திடம் இருந்த கத்தியை பிடுங்கி சரமாரியாக ஆனந்தை குத்தி கடலில் தள்ளி விட்டு ஒன்றும் தெரியாது போல் வீட்டிற்கு வந்துவிட்டார் இந்நிலையில் ஆனந்த் பிணம் நேற்று மாலையில் கரை ஒதுங்கி உள்ளது இதையடுத்து காவல் துறை விசாரணையில். இம்ரான் ஆனந்த்தை கொலை செய்தது தெரிய வந்தது இதனையடுத்து இம்ரானை திருவெற்றியூர் காவல்துறையினர் கைது செய்தனர்.