வடசென்னையில் குட்கா, கஞ்சா, போதை மாத்திரை போன்ற பொருட்களுக்கு எதிராக சிறப்பு ஆபரேசனை, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அருண், மேற்கொண்டுள்ளார். இதுனால் பல ஆண்டுகளாக காவல் துறையிடம் பிடிபடாமல் இருந்தவர்கள் தற்போது சிக்கி வருகின்றனர்.
அதன் ஒரு நடவடிக்கையாக, இணை ஆணையர் பாலகிருஷ்ணன், தலைமையில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்டையார்பேட்டை வினோபா நகர் மெயின்ரோட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர், மேற்பார்வையில் H6 ஆர்கேநகர் ஆய்வாளர் கொடி ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மணி, பிரவின்குமார், சங்கர், மற்றும் காவலர்கள் சந்திரன், வெங்கடேசன், மறைமதி விஜயம் கவி தென்றல், ஆகியோர் தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் 3-வது தெருவில் இருந்த TNO3 T 1157ஆட்டோவில் இருந்த மூணு மூட்டை HANS – ஐ பறிமுதல் செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டனின், வாக்குமூலத்தின் பேரில் வினோபா நகர் முதல் தெருவில் வசிக்கும் ராஜன் என்பவர் வீட்டில் நான்கு மூட்டை HANS – ஐ பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக கொடுங்கையூர் காவல் நிலைய சரகத்தில் உள்ள எம் ஜி ஆர் நகர் பகுதியில் 7 மூட்டை swagath Tobacco பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்ததில். ஆந்திரா மாநிலத்தில் இருந்து போதை புகையிலை களை கொண்டு வந்ததும் இந்த கடத்தலில் 6 நபர்கள் கொண்ட கும்பல் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது தற்போது மணிகண்டன் (25) ரமேஷ் (31) இருவரை ஆர்கே நகர் காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்த 14 மூட்டை போதை புகையிலையும் அதற்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய நான்கு நபர்களை ஆர்கே நகர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.