சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் இயங்கி வந்த மார்க்கெட் சமூக விலகலை முன்னிட்டு ஐஓசி மார்க்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறி விற்பனையின்போது சமூக விலகல் கடைபிடிக்கப்படுகிறதா? என வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி ஐஓசியில் அமைக்கப்பட்ட மார்க்கெட்டில் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு குடும்பத்துடன் காய்கறி வாங்க வந்த கணவன் – மனைவி மற்றும் குடும்பம் குடும்பமாக காய்கறி வாங்க வந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் குடும்பத்துடன் சுற்றுலா போல வருபவர்கள் முட்டி போட வைக்கப்படுவார்கள் என மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தார்.

காய்கறி வாங்க வந்தவர்களிடம் சமூக விலகல் பின்பற்ற வேண்டும் என அங்கு வந்த பெண்களையும் எச்சரித்தார். மேலும் மார்க்கெட்டில் சமூக விலகலை பின்பற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.