சென்னையில், இரண்டாவது ஞாயிறு தளர்வு இல்லாத கடுமையான ஊரடங்கு இருக்கிறது இந்த ஊரடங்கு நேரத்தில், மக்களின் ஒத்துழைப்பு குறித்து காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் ஆய்வு மேற்கொண்டார், சென்னை, தங்கசாலை பகுதியில் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு மேற் கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது

தளர்வு இல்லாத ஊரடங்கில், பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளனர். இதுவரையில்
52,234 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 6,0131 முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது,

சுவாசகவசம் சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்துக்காக
23,704 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலி பாஸ் மூலம் பயணம் மேற்கொண்ட காரணத்துக்காக, 58 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலியாக இ பாஸ் தயாரிப்பது சட்ட விரோத குற்றமாகும், இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த காலகட்டத்தில் கட்டுப்பாட்டோடு இருந்ததால் தான், கொரானா தொற்றிலிருந்து விடுபட முடியும்.

ஊரடங்கை மீறும் நபர்களை
காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது, எந்த மாதிரியான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என வழிமுறைகள் உள்ளது.

சென்னை மாநகரை பொறுத்தவரையில் மனதை புண்படுத்தும் வகையில் கூட பேச கூடாது , அடிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளோம், இதுவரையில்
காவல்துறையினர்
410 நபர்கள் குணமடைந்து பணிக்கு அமர்ந்துள்ளனர்
காவல்துறையினர் மொத்தம் 1065 நபர்கள் கொரானா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என அவர் தெரிவித்தார் இன் நிகழ்வில் இணை ஆணையர் கபில்குமார் சரத்கர்,துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, ராஜசேகர் உடன் இருந்தனர்.