சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, ஆவூர் முத்தையா தெருவில் இயங்கி வரும். அரசு மதுபானக்கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். இணைந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கூறுகையில் மதுபானக் கடையில். மது பிரியர்கள். மதுவை குடித்து விட்டு, அப்பகுதியில் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும். அரை நிர்வாணத்தில் இருப்பதாகவும். இதனால் அப்பகுதியில், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள், மற்றும் அப்பகுதி பெண்கள். நடந்து செல்லும்போது கிண்டல் கேலி செய்வதாகவும். இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட முடியவில்லை, இதனால்.
இந்த மதுபான கடையை அகற்றக்கோரி பல அதிகாரிகளிடம் மனு கொடுத்ததாகவும். எங்கள் மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும், இதுவரை எடுக்கவில்லை. என்று கூறி, உடனடியாக இந்த அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.