சென்னை பாடி குமரன் நகர். மகாத்மா காந்தி சாலை, இணைப்பு பகுதியில். கடந்த வாரம் பெய்த கனமழையால், மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு உருவாகியுள்ளது.

இந்த சாலை பேருந்து செல்வதற்கும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் மிக முக்கியமான சாலை என்பதால். அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்வார்கள். என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இரண்டு வாரங்கள் ஆகியும் சாலை சரி செய்யாததால் போக்குவரத்து வசதி தடை செய்யப்பட்டு இருக்கிறது. அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சாலையை சரி செய்து இப்பகுதியில் பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.