இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்ட பாளையம் கிராமத்தில் உள்ள 9வது வார்டு பகுதியிலுள்ள சுடுகாட்டு பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் டேங்க் அமைக்கப்பட்டது.

அதில், அப்பகுதி பொது மக்கள், ஆடு.மாடு.மேய்ப்பவர்களுக்கும் வழிப்போக்கர்கள் தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் சமூக விரோதிகள் சிலர் இந்த தண்ணீர் டேங்கை உடைத்து விட்டனர்.

அதற்குப் பிறகு அந்த டேங்கில் தண்ணீர் ஏற்றுவதில்லை. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தும் சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் டேங்கை சீர் செய்யாமலே உள்ளது.

தற்போது வெயில் காலம் என்பதால் குடிநீர்த் தட்டுப்பாடுகள் அதிக அளவில் இருக்கும் அப்பகுதி மக்களுக்கும் குடிநீர் தொட்டியை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.