சென்னை எண்ணூர் கத்திவாக்கத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கள பணியில் 100 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் கொடுக்கப்படாத பட்சத்தில் இன்று காலை அவர்கள் பணிக்கு வந்த போது அங்கு வந்த உதவி பொறியாளர் இளஞ்செழியனிடம் சம்பளம் குறித்து கேட்டபோது நீங்கள் இரண்டு மாத காலம் வேலையே செய்யவில்லை. ஒவ்வொருவரும் 50 பேர் பிடிக்க வேண்டும், ஆனால் நீங்கள் யாரையும் பிடிக்கவில்லை எனவும், உங்களுக்கு சம்பளம் வராது எனக்கூறி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறி அங்கிருந்த 100 க்கும் மேற்பட்ட கள பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் ஆர்ப்பாட்டத்தில் இருந்த சில பெண்கள் மயங்கி விழுந்ததால் அவர்கள் சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.