சென்னை கொருக்குப்பேட்டை முதல் கும்முடிபூண்டி வரையிலான மின்சார ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொள்வது மற்றும் ரயில் பயணிகளுக்கு இடையூறு செய்வது போன்ற குற்றச் செயல்களை தடுக்க காவல்துறை இயக்குநர் இரும்புப் பாதை தமிழ்நாடு முனைவர் சைலேந்திரபாபு உத்தரவுபடி தலைவர் வனிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதன்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் சூலூர்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வந்தடைந்தது ரயில் பின்னால் உள்ள மகளிர் பெட்டிக்கு அருகே உள்ள பெட்டியில். பயணித்து வந்த கல்லூரி மாணவனின் உடையிலும் நடையிலும் சந்தேகம் ஏற்பட்டது.அங்கிருந்து தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது. கல்லூரி மாணவன் வயது 18 இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வருவதாகவும். அவனது இடுப்பில் மிக கூர்மையான 2அடி நீளமுள்ள பட்டாகத்தி இருந்தது.

தெரியவந்தது. மேலும் கல்லூரி மாணவனை விசாரித்ததில் மற்ற கல்லூரி மாணவர்களை தாக்க கத்தி வைத்திருந்ததாக கூறினார். பின்னர் மாணவனை கைது செய்த தனிப்படை போலீசார்.

கொருக்குப்பேட்டை இரும்புப் பாதை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மற்ற கல்லூரி மாணவர்களை தாக்குவதற்கு கத்தியை எடுத்துக் கொண்டு வந்ததாக தெரியவந்தது இதனை தொடர்ந்து கல்லூரி மாணவனை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றித் திரிவது வெகு வெகு வாக அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.