ராணிப்பேட்டை மாவட்டம் பூண்டி குறுவள மையத்தை சேர்ந்த 14 பள்ளிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஒருநாள் பயிற்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது குறுவள மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான கே.குமார் அவர்கள் தலைமையிலும் வி.சி. மோட்டூர் பள்ளி தலைமை ஆசிரியை வசந்தி அவர்களின் முன்னிலையிலும் பயிற்சி நடைபெற்றது பயிற்சி ஆசிரியர் சித்ரா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பொறுப்பாளர் விமலா ஆகியோர் பயிற்சி அளித்தனர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தி காட்டப்பட்டன இன்நிகழ்வில் ஒரு குழுவில் 6 வீதம் 84 பேர் கலந்து கொண்டனர் பெற்றோர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் ஒவ்வொரு பள்ளியின் கட்டமைப்பு கல்வி மாணவர்களின் வருகை பற்றி கருத்து பரிமாணங்கள் நடைபெற்றன பூண்டி பள்ளியின் கணித ஆசிரியை மணிமொழி நன்றி உரையாற்றினார்.

வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்…