சென்னை, திருவொற்றியூர் பகுதியில், வன்னியர் சங்கம் சார்பில், பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

சென்னை, திருவொற்றியூர், ராஜா சண்முகம் தெருவில், 300 க்கும் மேற்பட்ட பொது மக்கள், கொரோனா ஊரடங்கு தொடர்பாக, வருமானமின்றி, வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்தனர், அவர்களுக்கு, வன்னியர் சங்கம் சார்பில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் டில்லி மற்றும் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து, 300 நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.