சென்னை கோயம்பேடில் இருந்து திருவொற்றியூருக்கு நோக்கி வந்த 159A பேருந்து தண்டையார்பேட்டை தபால் நிலையம் அருகில் கடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் பேருந்தில் பயணம் செய்தாரா அல்லது சாலையை கடந்தாரா என்பது மர்மமாக உள்ளது. அப்போது அங்கு வந்த தண்டையார்பேட்டை காவலர்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தாள் உண்மை சம்பவம் தெரியும் என்று கூறி உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.