சென்னை திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்த லாரிகளில் சிலர் ஆயில் திருடி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது இதையடுத்து கடந்த 11ம் தேதி அன்று இரவு திருவொற்றியூர் காவலர்கள் ரோந்துப்பணியில் இருந்தனர் அப்போது ஆயில் திருடிய தண்டையார் பேட்டை வீரா குட்டி தெருவை சேர்ந்த மணிகண்டன்(எ) ஆயில் மணி(36) என்பவரை கைது செய்தனர் அவருடன் லாரி ஓட்டுனர் மாறன் என்பவரும் சிக்கினார் அவர்களிடம் இருந்து 700 லிட்டர் டீசல் குட்டி வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆயில் சீனியை தேடி வந்தனர் நேற்று முன் தினம் கிடைத்த தகவலின் படி உதவி ஆய்வாளர் காதர், தலைமைக்காவலர் சரவணன், ஆகியோர் மணலி கிராம தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த சீனிவாசன்(எ) ஆயில் சீனி(34) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்,