ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31ம் திகதி உலக சிக்கன தினம் ( World Thrift Day) கொண்டாடப்படுகின்றது.

1924ல் இத்தாலியில் மிலான் நகரில் உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாட்டில் ‘உலக சிக்கன தினம்’ கொண்டாப்பட வேண்டும் என உறுதிசெய்யப்பட்டது.

இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் காரணமாக வாழ்க்கையில் சிக்கனம் மிக முக்கியமான ஒன்றாகும் என்ற கருப்பொருளில் ஒவ்வொருவருடமும் சிக்கனதினம் அக்டோபர் 31 ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

‘ஆகாறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை’ அதாவது வரவு பெரிதாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை செலவு சிறிதாக இருக்கும் வரை கேடு இல்லை என்பது இதன் பொருளாகும்.. வருவாய்க்கு தக்க செலவு செய்பவனுக்கு தீங்கு கவலைகள் இல்லை. இதிலிருந்து சிக்கனத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளலாம்.

1924-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் உலக சேமிப்பு தினத்தை சிறப்பிக்க இந்திய அஞ்சல்துறை 1971-ஆம் ஆண்டு 20-பைசா மதிப்புள்ள அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது என திருச்சிராப்பள்ளி அஞ்சல் தலை மற்றும் நாணயவியல் சேகரிப்பாளரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் கூறினார்