அக்டோபர் 31 அன்று இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இது 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. சர்தார் வல்லப் பாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் நாளை ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது

 

சர்தார் வல்லப்பாய் படேல்

(அக்டோபர் 31, 1875 – டிசம்பர் 15, 1950) வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவை கட்டமைத்தவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என பல முகங்களைக் கொண்ட இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.

 

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவராவார்.

ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

 

இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சாது நர்மதா அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. 182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும்.

 

இச் சிலையை அமைப்பதற்காக குஜராத் அரசால் சர்தார் வல்லபாய் படேல் ராஷ்டிரிய ஏக்தா டிரஸ்ட் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சிலையினை அமைப்பதற்காக தேவைப்படும் இரும்பிற்காக இந்தியாவின் அனைத்துக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்தும் அவர்களிடம் உள்ள பயன்படுத்தாத இரும்புக் கருவிகள் நன்கொடையாக பெறப்பட்டது.

 

இந்த நினைவுச்சின்னம் நர்மதா அணையின் எதிரில் 3.2 கிமீ தொலைவில் சாது பெட் தீவில் கட்டப்பட்டது. 58 மீட்டர் பீடமும், 182 மீட்டர் உயரமும் கொண்ட இதன் மொத்த உயரம் 240 மீட்டர் ஆகும். இரும்பு பிரேம்கள், சிமெண்ட் கான்கிரீட், செம்புப்பூச்சு ஆகியவற்றைக்கொண்டு இது அமைந்துள்ளது.இதனைக் கட்டுவதற்கு 75,000 கன மீட்டர் கான்கிரீட்டும், 5,700 டன் இரும்பும், 18,500 டன் இரும்புப்பட்டைகளும், 22,500 டன் செப்புத்தகடுகளும் தேவைப்பட்டன. வல்லபாய் படேலைக் குறிக்கின்ற இச்சிலையில் அவர் வழக்கமாக அணியும் ஆடையுடன் நடந்து வரும் நிலையில் உள்ளது.

 

இந்திய ரிசர்வ் வங்கி சர்தார் வல்லபாய் படேலுக்கு இரண்டு ரூபாய் மதிப்பில் காப்பர் நிக்கல் உலோகத்தில் 6.02 கிராம் எடையில் 25.9 மில்லி மீட்டர் விட்டத்தில் 1.55 மில்லி மீட்டர் தடிமனில் பதினொரு ஹென்டகோகனல் வடிவத்தில் நினைவார்த்த நாணயம் வெளியிடப்பட்டது

 

இந்திய அஞ்சல் துறையினர் பொதுப் பயன்பாடு மற்றும் நினைவார்த்த அஞ்சல் தலையிணை பல்வேறு மதிப்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என திருச்சிராப்பள்ளி அஞ்சல்தலை சேகரிப்பாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் விளக்கினார்.